Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரசிகரை அடித்தாரா கமல்ஹாசன்? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வீடியோ

Advertiesment
ரசிகரை அடித்தாரா கமல்ஹாசன்? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வீடியோ
, ஞாயிறு, 26 நவம்பர் 2017 (18:24 IST)
காலில் விழும் ரசிகர் ஒருவரை கமல் ஹாசன் அறைந்ததாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவரது ரசிகர்கள் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


 
நடிகர் கமல்ஹாசன் தனது காலில் விழுந்து வணங்கும் ரசிகர் ஒருவரை கன்னத்தில் அறைவது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதாளங்களில் வைரலாக பரவியது. அவர் ரமேஷ் அரவிந்துடன் வெளியே சென்று திரும்பும்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
 
இந்நிலையில் தற்போது இந்த வீடியோவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கமல்ஹாசன் ரசிகர்கள் அதே வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் கமல்ஹாசன் வரும்போது காவலர் அந்த ரசிகரை முன்னே இழுத்துச் செல்வது தெளிவாக உள்ளது. காலையில் பரவிய வீடியோவில் கமல்ஹாசன் கை நீட்டுவது மட்டும்தான் உள்ளது. 
 
அதை வைத்து அவர் ரசிகரை அறைந்துவிட்டார் என்ற வதந்தியை பரப்பி வந்தனர். மேலும், அந்த வீடியோவில் இடம்பெற்ற சம்பவம் கமல்ஹாசன் உத்தம் வில்லன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகத்திலேயே பரிதாபமானவர்கள் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்தான்: கஸ்தூரி