Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் - 2 படப்பிடிப்பு விபத்து குறித்து கமல்ஹாசன் கருத்து !

Webdunia
வியாழன், 20 பிப்ரவரி 2020 (16:48 IST)
இந்தியன் படப்பிடிப்பு விபத்து குறித்து கமல்ஹாசன் கருத்து
படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
 
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நேற்று இரவு நடைபெற்றது. அப்போது 150 அடி உயர கிரேன் கீழே விழுந்ததில் மூன்று பேர் பலியானார்கள்.
 
10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் படப்பிடிப்பின் போது விபத்தில் பலியானோருக்கு அஞ்சலில் செலுத்திய கமல்ஹாசன், மூன்று பேரின்  குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, திரைப்பட தொழிலில் இருக்க வேண்டிய பாதுகாப்பு இல்லையே என்பதையே இந்த விபத்து காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
 
மேலும், படப்பிடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு சினிமா பிரபலங்கள் வைரமுத்து, தனுஷ், மாரி செல்வராஜ், சிம்ரன், எஸ்.ஜே.சூர்யா உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments