Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துரோகம் செய்த அதிமுகவையும் பாஜகவையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்… கே எஸ் அழகிரி கோபம்!

துரோகம் செய்த அதிமுகவையும் பாஜகவையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்… கே எஸ் அழகிரி கோபம்!
, திங்கள், 28 ஜூன் 2021 (12:52 IST)

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி நீட் தேர்வில் பாஜகவும் அதிமுகவும் தமிழக மக்களுக்கு செய்த துரோகத்தைப் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், 'ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் நீட் தேர்வு திணிக்கப்பட்டது' என்று கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்குப் பலமுறை காங்கிரஸ் கட்சி சார்பில் விளக்கமாகப் பதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் திரும்பத் திரும்பப் பிரச்சனையை திசை திருப்புவதற்காக காங்கிரஸ் கட்சி மீது பழிபோட அதிமுக முயல்கிறது. நீட் தேர்வு குறித்து இத்தகைய கேள்வியை எழுப்புவதற்கு அதிமுகவினருக்கு எந்தவிதமான தகுதியும் இல்லை. தமிழகத்தில் நீட் தேர்வைத் திணித்தது பாஜகவும் அதிமுகவும்தான் என்பதற்கு நிறைய ஆதாரங்களைக் கூற முடியும்.

உச்ச நீதிமன்ற ஆணையின்படி 2013ஆம் ஆண்டில் இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவக் கல்லூரி படிப்பிற்கு நுழைவுத்தேர்வை நடத்த முடிவு செய்தது. இந்த முடிவுக்கு எதிராக சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 18 ஜூலை 2013இல் நீட் தேர்வுகளை ரத்து செய்தது. கல்வி என்பது பொதுப் பட்டியலில் இருப்பதை அடிப்படையாகக் கொண்டு நீட் தேர்வு நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் 2013இல் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக இந்திய மருத்துவ கவுன்சில் 11 ஏப்ரல் 2016இல் சீராய்வு மனுத்தாக்கல் செய்தது. இதில் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலமாக 2016 முதல் நாடு முழுவதும் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது. அப்போது மத்தியில் பாஜகவும், மாநிலத்தில் அதிமுகவும்தான் ஆட்சியிலிருந்தன.

நீட் தேர்வில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு ஓராண்டிற்கு மட்டும் விலக்கு அளிப்பதற்கு 20 மே 2016இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. இந்த விலக்கு ஓராண்டிற்குப் பிறகு ரத்து செய்யப்பட்டு மீண்டும் நீட் தேர்வை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கட்டாயமாக்குகிற வகையில் மத்திய பாஜக அரசு மக்களவையில் 18 ஜூலை 2016இல் மசோதாவை நிறைவேற்றியது. அதேபோல, 1 ஆகஸ்ட் 2016 அன்று மாநிலங்களவையில் அதே மசோதா குரல் ஓட்டு மூலம் நிறைவேறியது.

இந்தியா முழுவதும் நீட் தேர்வைக்


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசின் பேச்சு அதிகம், செயல்பாடு குறைவு: ப சிதம்பரம் விமர்சனம்!