Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக ஸ்டாலின் ஒரு ”இம்சை அரசன்”…பொங்கும் ஜெயகுமார்

Arun Prasath
புதன், 27 நவம்பர் 2019 (13:25 IST)
தமிழகத்தின் இம்சை அரசன் முக ஸ்டாலின் தான் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் மத்திய அரசோ அல்லது மாநில அரசோ எந்த திட்டம் கொண்டு வந்தாலும் திமுக அதனை எதிர்த்து வந்துள்ளது. குறிப்பாக நீட் தேர்வை அமல்படுத்தியதற்கு திமுக பெரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், தமிழகத்தின் இம்சை அரசன் முக ஸ்டாலின் தான். எந்த திட்டத்தையும் செயல்படவிடாமல் தடுக்கிறார்” என விமர்சித்துள்ளார்.

மேலும் “நீட் தமிழகத்திற்கு தேவையில்லாதது, நீட் தேர்வை ரத்து செய்யுமாறு தொடர்ந்து குரல் கொடுப்போம்” எனவும் கூறியுள்ளார். முன்னதாக நீட் தேர்வு குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என அதிமுகவினர் கூறிவரும் நிலையில் தர்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லாதது என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments