Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கவுண்டமணி கூட கட்சி ஆரம்பிக்கலாம்: விஜயை பங்கமாய் கலாய்க்கும் ஜெயக்குமார்

கவுண்டமணி கூட கட்சி ஆரம்பிக்கலாம்: விஜயை பங்கமாய் கலாய்க்கும் ஜெயக்குமார்

Arun Prasath

, திங்கள், 23 செப்டம்பர் 2019 (10:39 IST)
பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில், அதிமுகவை தாக்கி நடிகர் விஜய் பேசியதாக அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், சுபஸ்ரீயின் மரணத்திற்கு பேனர் அச்சடித்த பிரிண்டிங் பிரஸ்ஸை மூடுவதும், லாரி டிரைவரை கைது செய்வது மட்டும் போதாது, உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என விஜய் கூறினார். இதனை குறித்து அதிமுகவினர், படம் ஓட வேண்டும் என்பதற்காக விஜய் எங்களை தாக்கி பேசுகிறார் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஒரு பழுத்த மரம். அதனால் தான் அதன் மீது கல்லடி படுகிறது எனவும், மேலும் விஜய் மட்டுமல்ல கவுண்டமணியோ செந்திலோ யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என ஜெயக்குமார் கேலியாக பேசியுள்ளார்.

இது குறித்து திமுக இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நண்பர் விஜய் கூறியதில் எதுவும் தவறாக சொன்னதாக எனக்கு தோன்றவில்லை. நான் விஜயின் கருத்தை ஆதரிக்கிறேன் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இடைத்தேர்தலுக்காண நேர்காணல்: அதிமுகவில் 27 பேர் விருப்பமனு