Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவரை நாங்க பெருசா எடுத்துக்குறது இல்ல! – பொன்னாருக்கு ஜெயக்குமார் பதிலடி!

Webdunia
செவ்வாய், 14 ஜனவரி 2020 (12:46 IST)
தமிழகத்தில் வன்முறை பெருகிவிட்டதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய கருத்துக்கு பதிலடி கூறும் விதத்தில் பேசியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

தமிழகத்தில் களியக்காவிளை பகுதியில் எஸ்.ஐ வில்சன் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமாக மாறிவிட்டதாக தமிழக பாஜக முன்னாள் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஆளும் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாஜகவை சேர்ந்த ஒருவர் இப்படி விமர்சித்து பேசியது கூட்டணி கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு பதில் சொல்லும் வகையில் பேசியுள்ள அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ”பொன்.ராதாகிருஷ்ணன் கருத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேசமயம் அவர் கருத்தை பாஜகவின் கருத்தாக பார்ப்பதும் இல்லை. மத்திய அரசுதான் தமிழகம் சட்டம் ஒழுங்கில் முதல் இடத்தில் உள்ளதாக விருது கொடுத்துள்ளது. பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அரசையே எதிர்த்து கருத்து சொல்லியுள்ளாரா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments