Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னதான் நடக்குது அங்க? – கே.எஸ்.அழகிரியை அழைத்த சோனியா காந்தி!

Advertiesment
என்னதான் நடக்குது அங்க? – கே.எஸ்.அழகிரியை அழைத்த சோனியா காந்தி!
, செவ்வாய், 14 ஜனவரி 2020 (12:20 IST)
திமுக – தமிழக காங்கிரஸ் இடையே மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை டெல்லிக்கு அழைத்து பேசியுள்ளார் சோனியா காந்தி.

மக்களவையில் கூட்டணி வைத்த திமுக – காங்கிரஸ், தங்களது கூட்டணியை உள்ளாட்சி தேர்தலிலும் நீட்டித்தது. உள்ளாட்சி தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கியதில் காங்கிரஸுக்கு அதிருப்தி இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட எதிர்க்கட்சி கூட்டத்தில் திமுகவிலிருந்து யாரும் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. இதனால் இரு கட்சிகளிடையே மனக்கசப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விளக்கங்களை கேட்க சோனியா காந்தி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த பூசலை சாத்வீகமான முறையில் தீர்ப்பதற்கான நடவடிக்கையில் சோனியா காந்தி இறங்கியிருப்பதாக தெரிகிறது. கே.எஸ்.அழகிரியுடனான சந்திப்புக்கு பிறகு திமுகவை சோனியா காந்தி தொடர்பு கொண்டு பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவுக்கு வாங்களேன்! – சீன அதிபரை தொடர்ந்து ட்ரம்ப் வருகை!