அதிமுக கொடி, கரை வேட்டியை ஓபிஎஸ் அணியினர் பயன்படுத்தக்கூடாது: ஜெயக்குமார்

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (15:42 IST)
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஓபிஎஸ் உட்பட அவரது அணியினர் அதிமுக கொடி மற்றும் கரையை பயன்படுத்தக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
 
அதிமுக பொது குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க கூறி ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது செல்லும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து அதிமுக கொடி மற்றும் கரை வேட்டியை ஓபிஎஸ் அணியினர் பயன்படுத்தக்கூடாது என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக கொடி மற்றும் கரையை பயன்படுத்துவார்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல்.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

தமிழ்நாட்டுக்கு அள்ளி கொடுத்த மத்திய பட்ஜெட்.. தேர்தல் தான் காரணமா?

ரயில் பயணிகள் கவனத்திற்கு: மதுரை வழித்தடத்தில் 3 முக்கிய ரயில்கள் பாதை மாற்றம்!

தமிழ்க்கடவுள் முருகப் பெருமானை போற்றி வணங்கும் தமிழ்ச் சொந்தங்கள்.. விஜய்யின் தைப்பூச நல்வாழ்த்துக்கள்..!

இன்று மத்திய பட்ஜெட் 2026: பங்குச்சந்தையில் ஏற்றமா? இறக்கமா?

அடுத்த கட்டுரையில்
Show comments