சசிகலாவுக்கு தொடர்ந்து தோல்வியே: ஜெயகுமார் மகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (08:46 IST)
அதிமுகவை கைப்பற்றும் முயற்சி சசிகலாவுக்கு தொடர்ந்து தோல்வியை கொடுத்து வருகிறது என  ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி. 

 
அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த சசிகலா, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். 
 
அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன் என்று சசிகலா செய்தியாளர்களிடம் கூறியதை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் மேல்முறையீட்டுக்கு ஆன பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது. 
 
இந்நிலையில் இது குறித்து ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பை கேட்டு 1.50 கோடி தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
அதிமுகவை கைப்பற்றும் முயற்சி சசிகலாவுக்கு தொடர்ந்து தோல்வியை கொடுத்து வருகிறது. சசிகலா அரசியலில் இருந்து விலகிக் கொள்வது நல்லது. சசிகலாவுக்கு கட்சிக்கும் சம்பந்தமில்லை. சசிகலாவுக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் அதிமுகவில் இடமில்லை, இது ஒரே முடிவு தான். சசிகலாவுக்காக யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம். குழப்பத்திற்கு இடமில்லை என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரு லட்சத்திற்கும் கீழே வந்ததால் மகிழ்ச்சி..!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை: சென்னை வானிலை மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments