Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த ஆசிரியர் பெயர் ஜான்சன், ஜஹாங்கீர் என இருந்திருந்தால்..? பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு! - எம்.பி சு.வெங்கடேசன் பதிவு!

Prasanth Karthick
வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (10:49 IST)

சென்னை அரசுப்பள்ளியில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சை குறித்து நாடாளுமன்ற எம்.பியும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

சென்னை அசோக் நகரில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமீபத்தில் சுயமுன்னேற்ற சொற்பொழிவு என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் மகாவிஷ்ணு என்பவர் கலந்து கொண்டு மாணவிகளிடையே பேசினார். அப்போது அவர் மாற்று திறனாளிகள், ஏழைகளாக இருப்பவர்கள் முன் ஜென்ம பாவத்தின் காரணமாக அப்படி இருப்பதாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

அவரது பேச்சால் கோபமான பார்வை மாற்றுதிறனாளி ஆசிரியர் ஒருவர், மகாவிஷ்ணுவை தட்டிக் கேட்டபோது அதற்கு அவர் ஆசிரியரிடம் மோசமாக நடந்து கொண்டதாக வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் “பாஜக ஆளும் மாநிலம் ஒன்றில் ஓராண்டுக்கு முன் நாடாளுமன்ற கல்வி நிலைக்குழு ஆய்வு மேற்கொண்டோம்.

 

அங்கன்வாடி ஊழியர்கள் கிராமத்தில் உள்ள கோயில்களை தூய்மைப்படுத்தும் பணியும், அங்கு குழந்தைகளுக்கு போதிப்பதைப் பற்றியும் நாங்கள் கேள்வி எழுப்பினோம். அப்போது அந்த மாநிலத் தலைமைக் கல்வி அதிகாரி “கோயிலில்  பாவ புண்ணியத்தைப் பற்றிப் போதிக்காமல் ஒருவனுக்கு வாழ்வியலை எப்படி போதிக்க முடியும்?” என்று கேட்டார்.

 

இன்று அதே கேள்வியை தமிழ்நாட்டு அரசுப் பள்ளியில் சிறப்பு விருந்தினராக வந்து ஒருவர் கேட்கிறார்.

 

மறுப்பு தெரிவிக்கும் ஆசிரியரைப் பார்த்து,  “உங்கள் பெயரென்ன?” என்று கேட்கிறார்.

 

அந்த ஆசிரியரின் பெயர் ஜான்சன் ஆகவோ, ஜாஹீர் உசேனாகவோ இருந்திருந்தால் இன்று முதல் பள்ளிக் கல்வி பற்றிய பிரச்சனை ஆர். என். இரவியிடமிருந்து ஹெச். ராஜா வுக்கு மாற்றப்பட்டிருக்கும். அவர்கள் தெரிந்தே செய்கிறார்கள்.

 

எது “நன்நெறி” என்பதை தமிழ்நாடு அரசின் கல்வித்துறை செயலில் காட்ட வேண்டிய நேரமிது.” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments