சென்னை சிக்னல்களில் டெசிபல் மீட்டர் பொருத்தப்பட இருப்பதாகவும் வாகனங்களில் இருந்து அதிக ஒலி சத்தம் வந்தால் உடனடியாக வாகன ஒட்டிகளுக்கு தண்டனை கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹாங்காங் போன்ற வெளிநாட்டில் உள்ள சிக்னல்களில் டெசிபல் மீட்டர் பொருத்தப்பட்டு வாகனங்களின் ஒலி சத்தம் அளவிடப்படுகிறது. அந்த வகையில் சென்னையிலும் அதே போன்று சிக்கனலில் டெசிபல் மீட்டர் பொருத்தப்பட இருப்பதாகவும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக சத்தம் வாகனங்களில் இருந்து வெளிவந்தால் சிக்னலில் சிவப்பு விளக்கு மட்டுமே எரியும் வகையில் கொண்டுவரப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வாகனங்களில் ஒலி அளவு அதிகமாக இருப்பதை கண்டுபிடிப்பதற்கு போக்குவரத்து காவலர்களுக்கு இயர் பிளக் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
சென்னையில் ஒலி மாசை கட்டுப்படுத்த சிக்னலில் தண்டனை என்ற புதிய நடவடிக்கையை மேற்கொள்ள சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ள நிலையில் அனைத்து வாகன ஓட்டுநர்களும் தங்கள் வாகனங்களில் உள்ள ஒலி சத்தத்தை சோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.