Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் சிறுத்தை நடமாட்டமா? கிராம மக்கள் அச்சம்.! வனத்துறை கண்காணிப்பு.!!

Senthil Velan
செவ்வாய், 23 ஜனவரி 2024 (11:26 IST)
கோவை  குனியமுத்தூர் பகுதியில்  சிறுத்தை உலா வருவதாக கிராம மக்கள் கூறியதை அடுத்து, வனத்துறை ஊழியர்கள் தானியங்கி புகைப்படக் கருவியை பொருத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
 
கோவை, மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு எட்டிமடை காவல் சுற்றுக்கு உட்பட்ட கோவை குனியமுத்தூர் கிராம பகுதியில்  இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். 
 
அதன்படி வனத்துறை ஊழியர்கள், குனியமுத்தூர் ஜே ஜே நகர், அபிராமி நகர், M.S.அவன்யூ, M.S.பார்க், K.M.R.நகர், M.S.கார்டன் மற்றும் செங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணித்தனர். அதில் எந்த ஒரு கால் தடமும், தடயங்களும் ஏதும் தென்படவில்லை.

ALSO READ: மத்திய அரசின் புதிய சட்டம்.! தமிழகத்திலும் வெடித்தது போராட்டம்.!!
 
இதை அடுத்து சிறுத்தை நடமாட்டத்திற்கான தடயங்களை கண்காணிக்க தானியங்கி புகைப்பட கருவி (camera trap) பொருத்தி தொடர் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்  மேற்கொண்டு வருகிறனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 ஆண்டுகளுக்கு பின் பேருந்து கட்டணம் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

பொங்கல் தினத்தில் யுஜிசி நெட் தேர்வு தேதிகள் அறிவிப்பு.. கடும் எதிர்ப்பு கிளம்புமா?

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? அறப்போர் இயக்கம் கேள்வி..!

ராஜ்யசபா தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி: பெரும்பான்மை இல்லை என அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments