காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்தக் கூடாது; வேல்முருகன் அதிரடி

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2018 (11:52 IST)
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்த அனுமதிக்கக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சியின் தொண்டர்கள் சமீபத்தில் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். தமிழர்களின் உரிமையைப் பறிக்க நினைக்கும் மத்திய அரசுக்கு நாம் வரி செலுத்தக் கூடாது எனறார் வேல்முருகன். 
இந்நிலையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்த அனுமதிக்கக் கூடாது என வேல்முருகன் தற்பொழுது கூறியுள்ளார். வேல்முருகனின் இந்த கருத்திற்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments