Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை..! விஜயை புகழ்ந்து தள்ளிய சீமான்..!

Advertiesment
Seeman Vijay

Senthil Velan

, வெள்ளி, 28 ஜூன் 2024 (12:48 IST)
மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
 
பத்தாம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விஜய் பாராட்டு சான்றிதழும், ஊக்க தொகையும் வழங்கினார். விஜயின் இந்த செயலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கல்வி என்பது மானுட உரிமை அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை என்று குறிப்பிட்டுள்ளார். கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை என்று தெரிவித்துள்ளார்.
 
ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார். பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும் என்று கூறியுள்ளார்.


ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி’ எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை - பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்.. உயர்நீதிமன்றம் உத்தரவு..!