சென்னை உட்பட 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

Siva
வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (08:23 IST)
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று காலை 7 மணிக்கு வெளியிட்ட அறிக்கையின்படி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கோவை, தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் உள்ளிட்ட சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
 
இந்த மழை காரணமாக சில பகுதிகளில் சாலைகள் வழுக்கக்கூடும் என்றும், இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இந்த வானிலை எச்சரிக்கை, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக வெளியிடப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments