Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

Siva
ஞாயிறு, 22 ஜூன் 2025 (18:07 IST)
நடிகர் விஜய் இன்னும் நேரடியாக களத்திற்கு வராத நிலையிலேயே, திமுக அச்சமடைவதாக பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். ஒருவேளை விஜய் களத்தில் இறங்கிவிட்டால், திமுக இன்னும் அதிகமாக அச்சமடையும் என்றும், ஒரு தொகுதிக்கு ₹50 கோடி முதல் ₹100 கோடி வரை செலவு செய்ய திமுக திட்டமிட்டுள்ளதாகவும் மணி அளித்த பேட்டியில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
"விஜய்க்கு 15 முதல் 20 சதவீதம் வாக்குகள் இருப்பதாக நான் கேள்விப்படுகிறேன். குறைந்தபட்சம் 10 முதல் 12 சதவீதம் வாக்குகள் அவர் பெற்றால், திமுகவுக்கு மிகப்பெரிய சேதாரம் ஏற்படும்," என்றும் பத்திரிகையாளர் மணி தெரிவித்தார். அதிமுக - பாஜக கூட்டணிக்கு விஜய் வந்துவிட்டால், அது நிச்சயமாக ஒரு 'கேம் சேஞ்சராக'  இருக்கும் என்றும், ஆட்சி மாறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக எந்த சமரசத்தையும் செய்யத் தயார் என்று விஜய் கூறியது, அவர் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைவார் என்றுதான் தான் கருதுவதாக பத்திரிகையாளர் மணி கூறினார்.
 
மொத்தத்தில், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் இதுவரை கண்டிராத மிகவும் சவாலான ஒரு தேர்தலாக இருக்கும் என்றும் பத்திரிகையாளர் மணி தனது பேட்டியில் தெரிவித்தார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி.டி.வி.தினகரனுடன் பேசினேன்; அவர் மறுபரிசீலனை செய்வார்.. அண்ணாமலை நம்பிக்கை..!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 2,200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சென்னை உட்பட 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப், இன்ஸ்டாவுக்கு தடை! அண்டை நாடு எடுத்த அதிரடி முடிவு..!

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அடுத்த கட்டுரையில்
Show comments