"புதிய கீதை" வழியில் தீய சக்திகளை எதிர்த்து நிற்கும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து என பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை செளந்திரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
நாளைய தீர்ப்பு" - இல் ஆரம்பித்து "அழகிய தமிழ் மகனாக" வலம் வந்து "திருப்பாச்சி"-இல் தங்கை பாசத்தையும் "சிவகாசி" இல் தாயின் அன்பையும் பிரதிபலித்து "துப்பாக்கி" ஏந்தி தீவிரவாதிகளை அழித்து தேச பக்தியை வெளிப்படுத்தி "வாரிசு" அரசியலை எதிர்த்தால் தனக்கு வந்த இன்னல்களிலிருந்து "சுறா"வாக நீந்தி "கில்லி" யாக வெற்றி கண்ட "தமிழன்" "ஜன நாயகன்" தம்பி திரு.விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
"புதிய கீதை" வழியில் தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன்.
மேலும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் சமூக வலைதள பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது