Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

Mahendran
ஞாயிறு, 22 ஜூன் 2025 (17:44 IST)
இன்று அதிகாலை, அமெரிக்க ராணுவம் ஈரானின் ஃபோர்டோ, இஸ்ஃபஹான், நடான்ஸ் ஆகிய அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இது சர்வதேச சட்டத்தை மீறிய செயல் என ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை தொடர்ந்து, ஏமன் ராணுவம் போரில் அதிகாரப்பூர்வமாக இணைவதாக அறிவித்துள்ளது. செங்கடல் பகுதியில் உள்ள கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏமன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இந்த பரபரப்பான சூழலில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் செய்யத் அப்பாஸ் அரக்சி, அவசர அவசரமாக ரஷ்யா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்தான்புல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாளை ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளேன். ரஷ்யாவுடன் இணைந்து செயல்படுவோம்" என்று தெரிவித்தார். இந்தப் போர் பதற்றம் மத்திய கிழக்கு அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய பெண் போலீஸ்.. நெகிழ்ச்சி சம்பவம்..!

ஒரு சொல்லுக்கு பொருள் தெரியாதவரை கவிப்பேரரசு என அழைப்பதா? வைரமுத்துவுக்கு பாஜக கண்டனம்..!

மீண்டும் எடப்பாடியுடன் இணைய திட்டமா? டிடிவி தினகரன் கூறிய பதில்..!

இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

முன்னேற்றத்தை பாத்து வயிற்றெரிச்சல்! அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்! - அமெரிக்காவுக்கு வெங்கயா நாயுடு கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments