Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமான வரித்துறை சோதனைக்கெல்லாம் அஞ்சமாட்டேன்: கமல்ஹாசன்

Webdunia
சனி, 30 மார்ச் 2019 (21:32 IST)
தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் உள்பட ஒருசில பிரமுகர்களின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி மம்தா பானர்ஜி உள்ளிட்ட வேற்று மாநில தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் வருமான வரித்துறை சோதனை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கூறியபோது, 'நான் முறையாக வரி செலுத்துவதால் வருமான வரித்துறை சோதனைக்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் முறையாக வரி கட்டுகிறேன், நாங்கள் நேர்மையாக இருக்கிறோம் என்பதால் எங்களுக்கு வாக்களியுங்கள். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்களித்து புரட்சியை ஏற்படுத்தி மக்களும் புரட்சி திலகம் ஆகலாம் என்று கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசினார்
 
மேலும் அப்பா, தாத்தா வாக்களித்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல் நாட்டின் நலன் கருதி எங்களுக்கு வாக்களியுங்கள் என்றும், இதுவரை உங்களை ஏமாற்றியவர்களை புறக்கணித்து ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றும் கமல்ஹாசன் வாக்காளர்களை கேட்டுக்கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments