எத்தனை முறை சஸ்பெண்ட் ஆவார் இந்த இன்ஸ்பெக்டர்! லஞ்சம் வாங்கியதால் மீண்டும் சஸ்பெண்ட்

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (14:03 IST)
சென்னை அம்பத்தூரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியானதால், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அம்பத்தூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ரவிச்சந்திரன். இவர், அம்பத்தூர் தேசிய நெடுஞ்சாலை அருகே தனது போலீஸ் வாகனத்தில் அமர்ந்தபடி வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ, நேற்று வைரலானது.
 
வாகன ஓட்டிகளிடம் அபராத தொகையை பணமாக பெறக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், வாகன ஓட்டிகளிடம் பணம் பெறும் வீடியோ வெளியானது. இதையடுத்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
 
ரவிச்சந்திரன், ஏற்கனவே தேனாம்பேட்டையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற தர்மராஜ் என்ற போலீஸ்காரரை விரட்டிச்சென்று கீழே தள்ளி விபத்து ஏற்படுத்திய வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து கடந்த மாதம்தான் அவர் அம்பத்தூர் போக்குவரத்து போலீசுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments