Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? ஜன.28-ல் திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!!

Advertiesment
dmk congress

Senthil Velan

, புதன், 24 ஜனவரி 2024 (10:18 IST)
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வருகிற 28-ம்  தேதி திமுக காங்கிரஸ் இடையே  தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.
 
வருகிற ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான பணிகளில் ஈடுபடுமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
 
இதை அடுத்து,  மக்களவை தேர்தலுக்கான பணிகள், கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. 
 
இந்நிலையில் வருகிற 28-ம் தேதி மாலை 3:00 மணியளவில் சென்னை அறிவாலயத்தில்  திமுக, காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. 

 
டி ஆர் பாலு தலைமையிலான குழுவினர்,  5 பேர் கொண்ட காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 9 தொகுதிகளை ஒதுக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் தங்கம், வெள்ளி விலை உயர்வு.. இன்றைய சென்னை நிலவரம்..!