Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக தேர்தல் அறிக்கை இந்த முறை கதாநாயகியாக கூட இருக்கலாம்; கனிமொழி எம்பி

Advertiesment
திமுக தேர்தல் அறிக்கை இந்த முறை கதாநாயகியாக கூட இருக்கலாம்; கனிமொழி எம்பி

Mahendran

, செவ்வாய், 23 ஜனவரி 2024 (14:42 IST)
ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இருக்கும் என்று அக்கட்சியின் தலைவர்கள் கூறி வரும் நிலையில் இந்த முறை கதாநாயகியாக கூட தேர்தல் அறிக்கை இருக்கலாம் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
 
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து பேசினார். அவர் பேசியபோது, ‘திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, இம்முறை கதாநாயகியாக கூட இருக்கலாம். திமுக தேர்தல் அறிக்கை எப்போதும் போல இம்முறையும் முக்கிய பங்காற்றும்.
 
தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக எந்தெந்த இடங்களுக்கு செல்கிறோம் என்பது பற்றிய பட்டியல் தயாரித்து விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க உள்ளோம்.
 
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள பொது மக்கள், தொழிலாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டு தேர்தல் அறிக்கையை தயார் செய்வோம்’ என்று கூறினார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ. 1,003 கோடி முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் BIG TECH நிறுவனம்- அரசு தகவல்