Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேனர் வைக்கத் தடை – நீதிமன்றம் அதிரடி முடிவு !

Webdunia
வியாழன், 14 மார்ச் 2019 (14:16 IST)
தமிழகம் முழுவதும் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் பொதுக்கூட்டங்களுக்கான பேனர்கள் வைக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சாதா நாட்களிலேயே தெருக்கள் முழுவதும் பேனர்கள் சுவர் முழுவதும் அரசியல் கட்சி போஸ்டர்களாகவும் காட்சியளிக்கும். இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் சொல்லவே வேண்டாம். தேர்தல் முடியும் வரை பொதுக்கூட்டம், பிரச்சாரம் என எல்லாவற்றிற்கும் பேனர்கள் என்ற நிலை உருவாகியிருக்கிறது.

இந்நிலையில் சமீபகாலமாக தமிழகத்தில் போஸ்டர் மற்றும் பேனர்களுக்கு எதிராக வலுவானக் குரல்கள் எழுந்துள்ளன. இதற்குக் காரணம் சாலையோரம் வைக்கப்படும் பேனர்கள் விழுந்து ஏற்படும் விபத்துகளும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுமேயாகும். இதைத் தொடர்ந்து இப்போது தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பேனர்கள் வைக்கத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் கட்அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்கத் தடை விதித்தனர். மேலும்  அரசியல் கட்சி பொதுக்கூட்டங்களுக்கு மக்களைக் கூட்டாக அழைத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளையும் சேர்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments