Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அழகிய போலீஸ் நந்திதா... பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

அழகிய போலீஸ் நந்திதா... பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
, புதன், 6 மார்ச் 2019 (11:17 IST)
அட்டகத்தி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் நத்திதா சுவேதா. அதன் பிறகு சிவகார்த்திகேயனுடன்  எதிர்நீச்சல், விஜய்சேதுபதியுடன் இதற்கு தானே 


 
ஆசைப்பட்டாய் பாலகுமாரா, விஷ்ணு விஷாலுடன் முண்டாசுப்பட்டி,  விஜய்யுடன் புலி, விமலுடன் அஞ்சல என பல படங்களில் நடித்தார.
 
அதன் பிறகு புதுமுக நடிகைகளின் தாராளமான வரவால், அக்கட தேசத்தில் கரை ஒதுங்கினார். இப்போது   தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் படத்தில் 
 
நடித்துள்ளார். ராம்குமார்  சுப்புராமன் இயக்கி வரும் இப்படத்தை பிரபாகர் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் அழகான போலீஸ் வேடத்தில் நந்திதா சுவேதா நடித்துள்ளார். 
 
படத்துக்கு ஐபிசி 376 என பெயர் வைத்துள்ளார். துப்பாக்கியை தூக்கியபடி, கூகுளிங் கிளாஸ் அணிந்த அழகான போலீசாக  ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டரில் நந்திதா சுவேதா காட்சி அளிக்கிறார்.  நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எப்படி லீக் ஆச்சு! ஹன்சிகா அதிர்ச்சி