Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக கூட்டணியில் தேமுதிக இல்லை: உறுதி செய்த போஸ்டர்!

Advertiesment
விஜயகாந்த்
, புதன், 6 மார்ச் 2019 (08:45 IST)
அதிமுக, திமுக என இரு கூட்டணியிலும் மாறி மாறி பேரம் வந்த தேமுதிக தற்போது இரண்டு கூட்டணியிலும் இல்லாத நிலைமை ஏற்படவுள்ளதாக கூறப்படுகிறது
 
7 மக்களவை தொகுதிகள், ஒரு ராஜ்யசபா தொகுதி, ஒரு மத்திய அமைச்சர் பதவி, 8 சட்டமன்ற தொகுதிகள் என அளவுக்கு மீறி ஆசைப்பட்ட தேமுதிக, எந்த கூட்டணி தங்களுடைய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறதோ, அந்த கூட்டணியில் சேர முடிவு செய்திருந்தது
 
ஆனால் தகுதிக்கு மீறி ஆசைப்பட்ட தேமுதிகவை முதலில் திமுக கழட்டிவிட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னரே திமுக-தேமுதிக பேச்சுவார்த்தை நின்றுவிட்டது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் தொடர்ந்து தேமுதிக பேசி வந்த நிலையில் சமீபத்தில் விஜயகாந்த்-ஓபிஎஸ் சந்திப்பால் கூட்டணி உறுதி என்று கூறப்பட்டது.
 
ஆனால் இன்று சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க கூட்டணி கட்சிகளால் அடிக்கப்பட்ட போஸ்டர் ஒன்றில் விஜயகாந்த் புகைப்படம் இல்லை. அவரை தவிர மற்ற அனைத்து கட்சி தலைவர்களின் புகைப்படங்களும் இருக்கின்றது. பிரதமர் பங்கேற்கும் இன்றைய கூட்டத்தில் விஜயகாந்த் அல்லது எல்.கே.சுதீஷ் கலந்து கொள்வதாக செய்திகளும் இல்லை. எனவே அதிமுக கூட்டணியில் தேமுதிக இல்லை என்பதையே இது காட்டுவதாக கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அது ஓவரானதால் ஆபாச பட நடிகர் மரணம்