சென்னை தீவுத்திடலில் தொடங்கி மீண்டும் அங்கேயே சென்றடையும் வகையில் நடைபெறும் பார்முலா 4 கார் பந்தயம் வீரர்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.
பந்தய சாலை சர்க்யூட்டில் 19 வளைவுகள் இருப்பதாக கூறப்படுவதால் வீரர்களுக்கு கடும் சவாலாக இருக்கும் இந்த போட்டி பார்வையாளர்களுக்கு த்ரில்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று பிற்பகல் 2.45 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பயிற்சி சுற்றுகள் நடைபெறுகின்றன என்றும், ஃபார்முலா 4 - தகுதிச் சுற்றுகள் இன்று இரவு 7.10 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் என்றும், தகுதிசுற்று அடிப்படையில் நாளை நடக்கும் பிரதான பந்தயத்தில் வீரர்கள் வரிசைப்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஃபார்முலா 4 பந்தயம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அவசர முறையீடு செய்துள்ளது. அதில் "ஃபார்முலா 4 பந்தயத்திற்கான FIA சான்றிதழ் பெற கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும், 14 மணி நேர கால நீடிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை கோரிக்கை விடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.