Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெங்கு மழை..?

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (13:22 IST)
தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

 
கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக் கடலில் தோன்றிய வளிமண்டல காற்றழுத்த தாழ்வு தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்றும் தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி வரை இந்த புயல் காரணமாக பரவலாக மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
ஜாவத் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயலால் ஆந்திரா, ஒடிசா மாநில கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் நாகப்பட்டினம், காரைக்கால், ராமேஸ்வரம், பாம்பனில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து எண்ணூர், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களிலும் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழை பெய்யும் என கூறியுள்ளது. இன்று தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments