மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டம் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் முக்கியமான பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டத்திற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பெரியாறு அணை உள்ளிட்ட அணைகளில் தமிழக அரசுக்கு உள்ள உரிமைகளுக்கு இடையூறு ஏற்படும் என பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த மசோதாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் அணைப் பாதுகாப்புச் சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்திருப்பது ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையிலான உறவில் சறுக்கலாக அமைந்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.