Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

#ThalaivaOnDiscovery: கொரோனா ரணகளத்துலயும் ஒரு குதுகளம்!!

#ThalaivaOnDiscovery: கொரோனா ரணகளத்துலயும் ஒரு குதுகளம்!!
, செவ்வாய், 24 மார்ச் 2020 (09:23 IST)
இன்று #ThalaivaOnDiscovery என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். 
 
டிஸ்கவரி சேனலின் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சி மேன் வெர்சஸ் வைல்ட். பியர் க்ரில்ஸ் என்பவர் பல நாடுகளிலும் உள்ள காடுகளுக்குள் சென்று தனி ஆளாக அங்கு கிடைப்பவற்றை உண்டு வாழ்ந்து திரும்புவதுதான் அந்த நிகழ்ச்சியின் சாரம்சம்.  
 
உலகம் முழுவதும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் உள்ள நிலையில் தற்போதைய சீசன்கள் பிரபலங்களுடன் காடுகளுக்கு செல்லும் நிகழ்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பிரதமர் மோடிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.   
 
இதற்கான படப்பிடிப்பு கடந்த மாதம் பந்திப்பூர் தேசிய பூங்காவின் காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டது. அன்று முதல் ரஜினி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்களிடையே ஆவல் அதிகமாக இருந்தனர். இந்த ஆவலுக்கு நேற்று தீணி கிடைத்துவிட்டது போலும். 
webdunia
ஆம், நேற்று ரஜினிகாந்த பங்கேற்ற எபிசோட் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை அவரது ரசிகர்கள் பலர் கண்டுகளித்துள்ளனர். இந்நிலையில் இன்று #ThalaivaOnDiscovery என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து நேற்றைய எபிசோட் காட்சிகளையும், தங்களுக்கு பிடித்த நிகழ்வுகளையும் பதிவிட்டு வருகின்றனர். 
 
தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவரச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இது போன்ற நிகழ்வுகளும் நடக்கதான் செய்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒருநாள் இரவில் 1.5 லட்சம் பேர் வெளியேற்றம் – கலங்கும் மருத்துவர்கள்!