Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரிய கிரகணத்தின்போது திகவினர் செய்த செயல்: எச்.ராஜா கண்டனம்

Webdunia
வியாழன், 26 டிசம்பர் 2019 (12:32 IST)
நம் முன்னோர்கள் சொல்லும் பல விஷயங்களை மூடநம்பிக்கை என்ற பெயரில் திகவினர் மறுப்பு தெரிவித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் இன்று சூரிய கிரகணம் ஏற்படும் நிகழ்ச்சியின்போது உணவு அருந்தக்கூடாது தண்ணீர் அருந்தக் கூடாது என்று முன்னோர்கள் கூறி இருப்பதால் பலர் அதை கடைபிடித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் சூரிய கிரகணத்தின்போது உணவருந்தக் கூடாது என்ற மூடநம்பிக்கையை முறியடிக்க நிகழ்ச்சி ஒன்றுக்கு திகவினர் அழைப்பு விடுத்திருந்தனர். இன்று காலை சரியாக எட்டு மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கும்போது சென்னை பெரியார் திடலில் சிற்றுண்டி சாப்பிட்டு மூடநம்பிக்கையை முறியடிக்க போவதாகவும் அதில் திகவினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த அறிவிப்புக்கு எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: விஞ்ஞான பூர்வமான எதையும் ஏற்க்க மறுக்கும் பகுத்தறிவு வியாதி. மாற்று மத நம்பிக்கைகளை இவர் கொச்சை படுத்தியது உண்டா. முழு இந்து விரோதி. என்று கூறியுள்ளார். பொதுவாக எச்.ராஜா ஒரு டுவிட்டை பதிவு செய்தால் அதற்கு கேலியும் கிண்டலுமான பதில்கள் தான் அதிகம் இருக்கும். ஆனால் இந்த டுவிட்டுக்கு ஆச்சரியமாக ஆதரவு கமெண்டுக்கள் பதிவாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயகாந்த் நினைவிடத்திற்கு பேரணி.. அனுமதி மறுத்த காவல்துறை! - தேமுதிகவின் அடுத்த மூவ்!

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி… விஜயகாந்த் நினைவிடத்தில் மொட்டையடித்துக் கொண்ட ரசிகர்கள்!

கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று..!

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments