வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் மது குடித்து மரணம் அடைந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாத்தாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் டாஸ்மாக் கடையில் மது வாங்கி வீட்டில் வைத்து குடித்திருக்கிறார். அவர் குடித்தது போக மீதமுள்ள மதுவை அவருடைய பேரன் குளிர்பானம் என நினைத்து குடித்திருக்கிறார்.
இதனை அடுத்து சிறுவனுக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டு ஏற்பட்டதை அடுத்து அந்த சிறுவன் மரணம் அடைந்தார். இந்த தகவல் கேட்ட சிறுவனின் தாத்தாவும் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.