அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு!

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (07:55 IST)
கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு அரசு மற்றும் கலை கல்லூரிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு கவுன்சிலிங் நடந்து வந்தது என்பது தெரிந்ததே.  
 
இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்களுக்கு அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. 
 
காலியாக உள்ள அரசு கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 14ஆம் தேதி வரை அவகாசத்தை நீடித்து தமிழக உயர்கல்வித்துறை  உத்தரவிட்டு உள்ளது.
 
 எனவே காலியாக உள்ள இடங்களில் கல்லூரிகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் http://tngasa.in மற்றும் http://tngasa.org ஆகிய இரண்டு இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை கல்லூரிகளில் விண்ணப்பம் செய்யாதவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவர் விடுவிப்பு: என்ன காரணம்?

பாராளுமன்ற கூட்டத்தொடரின் நடுவே ராகுல் காந்தி ஜெர்மனி பயணம்: வெளிநாட்டு நாயகன் என பாஜக விமர்சனம்..!

மட்டன் பிரியாணி, வஞ்சிர மீன்.. அ.தி.மு.க. பொதுக்குழுவில் அசத்தும் விருந்து!

நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் இழக்க வைக்க செய்வோம்: செங்கோட்டையன் சவால்

2 நாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments