பொறியியல் படிப்புகளுக்கான மூன்று கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் இன்று முதல் துணை கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	பொது பிரிவில் விண்ணப்பித்துள்ள 13,650 பேரில் 13,244 மாணவர்கள் துணை கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
	மேலும் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள 4585 மாணவர்களில் 4446 பேர் துணை கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளதாக இருந்தது குறிப்பிடத்தக்கது 
	 
	பொது பிரிவில் விண்ணப்பித்த மாணவர்கள் இன்று முதல் நாளை மாலை 5 மணி வரை விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்து பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.