10 மசோதாக்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பிவிட்டார் ஆளுநர் ரவி என அமைச்சர் ரகுபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சட்டமன்றத்தில் 2-வது முறையாக அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநர் ரவி மறுத்துவிட்டதாகவும், சட்டப்படி 2-வது முறையாக அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்றும், ஆனால் 2-வது முறையாக அனுப்பிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பியது தவறு என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியால் நிர்வாகம் முடக்கப்பட்டிருப்பதாகவும்,
தமிழ்நாடு ஆளுநர் ரவியை திரும்பப் பெறுவதுதான் ஒரே தீர்வு என்றும் அமைச்சர் ரகுபதி
கூறியுள்ளார்.
சமீபத்தில் சட்டமன்ற சிறப்பு கூட்டம் கூடிய போது கவர்னர் திருப்பி அனுப்பிய அனைத்து மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தர மாட்டார் என்று ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதன்படியே அவர் அந்த மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.