Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறலாம்.. இவர்களுக்கு மட்டும் விலக்கு..!

Advertiesment
இன்று முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறலாம்.. இவர்களுக்கு மட்டும் விலக்கு..!

Siva

, திங்கள், 6 மே 2024 (06:58 IST)
நாளை முதல் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு  வரும் என்று கூறப்பட்டுள்ளதை அடுத்து இன்று முதல் இ-பாஸ் பெற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில் பேருந்துகளில் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் இ-பாஸ்  தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஊட்டி கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் முறை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவின் அடிப்படையில் இன்று முதல் இ பாஸ் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணி முதல் இணையதளம் மூலம் இ-பாஸ் பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் நாளை முதல் ஜூன் 30-ம் தேதி ஊட்டி கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்றும், ஊட்டி கொடைக்கானல் செல்பவர்கள் epass.tnega.org/ என்ற இணையதளத்தின் மூலம் இ-பாஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

ஆனால் அதே நேரத்தில் இ-பாஸ் நடைமுறை சொந்த வாகனத்தில் செல்பவர்களுக்கு மட்டும் தான் என்றும் பேருந்துகளில் செல்லும் சுற்றுலா பயணிகள் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Edited by Siva

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொளித்தும் வெயிலில் காத்திருக்குது செம மழை! – எந்தெந்த மாவட்டங்களில்?