2000 லெதர் ஜாக்கெட்; 1.60 கோடி –எரிந்து சாம்பல்

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (11:43 IST)
சென்னையில் இருந்து ஏற்றுமதிக்காக ஏற்றி செல்லப்பட்ட லெதர் ஜாக்கெட்கள் நிரம்பிய கண்டெய்னர் லாரியில் தீவிபத்து ஏற்பட்டது.

சென்னையை அடுத்த மாங்காட்டில் உள்ள தோல்பொருட்கள் தொழிற்சாலையில் இருந்து பொருட்கள் ஏற்றுமதிக்காக கண்டெய்னரில் ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டது. அப்போது மாங்காடு கோயிலருகில் மின்கம்பி உரசியதால் தீப்பற்றியுள்ளது. அதை அறியாமல் ஓட்டுனர் வண்டியை மேற்கொண்டு ஓட்டிச் சென்றுள்ளார்.

இதையடுத்து  பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு அருகில் சென்றபோது லாரியில் புகை அதிகமாகி வெளியானபோது ஓட்டுனர் அதைக் கவனித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து தீயணைப்புத் துறை வந்து தீயை உடனடியாக அணைத்துள்ளனர்.

லாரியில் இருந்த லெதர் ஜாக்கெட்கள் முழுவதும் தீக்கிரையாகி விட்டன. அதிலிருந்த தோல் பொருட்களின் விலை ஒரு கோடியே அறுபது லட்சம் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியார் சொன்னதை தான் நான் சொன்னேன்.. கமல் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் மறுப்பு..!

கூகுள் வரலாற்றிலேயே முதல்முறையாக 400 பில்லியன் டாலர்கள் வருமானம்.. இந்த 2 காரணங்கள் தான்..!

இந்திய ஐடி துறையின் அஸ்திவாரத்தையே மாற்றப்போகும் ஒரு எச்சரிக்கை மணி. சுதாரிக்க வேண்டிய காலம்..!

காகங்கள் இறப்பு!.. சென்னையில் பரவும் H5N1 வைரஸ்!. பறவைக் காய்ச்சல் பரவுமா?!..

மீண்டும் தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடி!.. பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு!...

அடுத்த கட்டுரையில்
Show comments