Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்வர் ராஜா எம்.பி மகன் மீது வழக்குப்பதிவு - போலீசார் நடவடிக்கை

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (15:56 IST)
ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாய் ஏமாற்றியதோடு, ரூ.50 லட்சம் பணம் பறித்ததாக எழுந்த புகாரில் அதிமுக எம்.பி. அன்வர் ராஜாவின் மகன் நாசர் மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 
அதிமுக எம்பி அன்வர் ராஜாவின் மகன் நாசர், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னுடன் மூன்று மாதங்கள் வாழ்ந்ததாகவும், பின்னர் தன்னுடைய சேமிப்பான ரூ.50 லட்சம் மற்றும் ரூ.10லட்சம் மதிப்பிலான நகையை பெற்று கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் சென்னையை சேர்ந்த பிரபல்லா என்ற பெண் ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தார்
 
இந்த நிலையில் இன்று காரைக்குடி பள்ளிவாசலில் அன்வர் ராஜா திருமணம் நடைபெறவிருந்த நிலையில் பள்ளிவாசல் முன் போராட்டம் நடத்திய பிரபல்லா, பள்ளிவாசல் ஜமாத்தாரிடம் திருமணத்தை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜமாத்தார் அன்வர்ராஜா மகனின் திருமணத்தை நிறுத்தினார். ஆனால், நிறுத்தப்பட்ட நாசரின் திருமணம் மற்றொரு ஜாமத்தால் நடத்தி வைக்கப்பட்டது. 

 
இந்நிலையில், பிரபல்லா கொடுத்த புகாரின் அடிப்படையில், வன்கொடுமை செய்தல், பணத்தை மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நாசார் அலி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 
இதையடுத்து நாசரிடம் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை: மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments