Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸாரிடமிருந்து தப்பிக்க மோசடி மன்னன் தற்கொலை முயற்சி

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (15:38 IST)
மோசடி வழக்கில் தொடர்புடைய அயோக்கியன் ஒருவன் போலீஸார் முன்னிலையில் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் முத்தையா(50). இவர் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார். பின்னர் அங்கிருந்த மக்களை ஏமாற்றி இரண்டு கோடி ரூபாய் வரை மோசடி செய்து பெருந்துறைக்கு தப்பி வந்தார். முத்தையா பெருந்துறையில் இருப்பதை அறிந்த புனே போலீஸார், நேற்று முன்தினம் காலை பெருந்துறை வந்தனர். 
பெருந்துறை போலீசாரின் உதவியுடன், முத்தையா வீட்டிற்கு சென்ற போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையின் போது முத்தையா கழிப்பறை செல்ல அனுமதி கேட்டார். போலீஸாரும் அவரை அனுமதிக்கவே, 'ஹார்பிக்' திரவத்தை குடித்து, தற்கொலைக்கு முயன்றார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, முத்தையா புனே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments