Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாத்தான்குளம் கொலை வழக்கு; இன்பெக்டரை காக்க முயன்ற அரசியல் பிரமுகர்!?

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (09:05 IST)
சாத்தான்குளம் கொலை வழக்கில் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை காப்பாற்ற அரசியல் பிரமுகர் ஒருவர் முயன்றதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் கவனத்தை பெற்றது. இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன் வந்து விசாரித்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடவடிக்கை எடுக்க சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து உடனடி விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி சம்பந்தப்பட்ட காவலர்களை கைது செய்தது.

இந்நிலையில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ரவி மட்டும் சிபிசிஐடியிடம் சிக்காமல் தப்பி வந்த நிலையில், கயத்தாறு அருகே தப்பி சென்று கொண்டிருந்த அவரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தப்பிசெல்ல அரசியல் பிரமுகர் ஒருவர் உதவிகள் செய்து வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்ரீதரை சுற்றி வளைத்து பிடித்தபோது அவரது வாகனத்தில் அரசியல் பிரமுகரது ஆட்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments