Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லை தாண்டும் ஏவுகணைகள், மின்னல் வேக விமானங்கள்: அப்டேட் ஆகும் இந்திய ராணுவம்!

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (08:36 IST)
லடாக் எல்லைப்பகுதியில் சீனாவுடனான மோதலை தொடர்ந்து இந்திய ராணுவத்திற்கு தளவாடங்கள் வாங்க 39 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.

லடாக் எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் சீன – இந்திய படைகளிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பு வீரர்களும் பலியாகி உள்ளனர். இந்த சம்பவத்தால் சீனா – இந்தியா இடையே போர் பதற்றம் எழுந்துள்ளது. தொடர்ந்து சீன செயலிகளையும், மத்திய அரசின் ஒப்பந்தங்களில் சீன நிறுவனங்களின் பங்களிப்பையும் இந்திய அரசு தடை செய்துள்ளது சீனாவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

சமாதான பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் கூட ராணுவத்தை பலப்படுத்துவதில் இந்தியா மும்முரமாக இறங்கியுள்ளது. முன்னதாக மிக் ரக விமானங்கள் கூடுதலாக தேவை என இந்திய விமானப்படை வலியுறுத்தி இருந்த நிலையில் முப்படைகளுக்கு தேவையான ராணுவ தளவாடங்கள் வாங்க 38 ஆயிரத்து 800 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இந்த தொகையில் ரஷ்யாவிடமிருந்து மிக் ரக விமானங்கள் வாகுவதோடு மட்டுமல்லாமல் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை கடக்கும் ஏவுகணைகள், நவீன ரக அஸ்த்ரா ஏவுகணை அமைப்புகளையும் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் முப்படைகளும் வலுவடையும் என தெரிவித்துள்ள அரசு இதில் 80% தளவாடங்கள் உள்நாட்டு தயாரிப்புகளாகும் எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் ஏலம்: வீரர்கள் தேர்வில் வித்தியாசம் காட்டிய சிஎஸ்கே - அணியை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய குறை!

லெபனான் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புதல்..!

மகாராஷ்டிரா முதல்வராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்.. ஆளுநருடன் சந்திப்பு!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி:

தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாகை - திரிகோணமலை இடையே மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments