தூத்துக்குடி தந்தை மகன் லாக்கப் மரணம் தமிழகம் மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தனக்கு ரூபாய் 2 கோடி வரை பேரம் பேசப்பட்டுள்ளதாக பாடகி சுசித்ரா தனது டுவிட்டரில் கூறியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
சாத்தான்குளம் தந்தை மகன் விவகாரம் குறித்து முதல் முதலாக சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது சுசித்ராவின் வீடியோ தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த சம்பவம் குறித்து அவர் தனது டுவிட்டரில் வீடியோ மூலம் தெரிவித்த நீண்ட விளக்கம் குறிப்பாக ஆங்கிலத்தில் அவர் தெரிவித்தது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா உள்பட பல பாலிவுட் பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் கிரிக்கெட் பிரபலங்களும், தொழிலதிபர்களும், இந்த சம்பவம் குறித்து சுசித்ராவின் வீடியோக்கு பின்னரே கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சாத்தான்குளம் சம்பவம் போலவே கடந்த ஆட்சியில் ஒரு சம்பவம் நடந்ததாகவும், அந்த சம்பவம் குறித்து வீடியோ போட்டால் தனக்கு ரூபாய் 2 கோடி வரை தர பேரம் பேசப்பட்டது என சுசித்ரா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்/ ஆனால் பேரம் பேசியது யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இதனை அடுத்து சுசித்ராவிடம் பேரம் பேசியது யார் என்பதை அவர் வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும் என்று நெட்டிசன்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்
மேலும் சசிகலா இன்னொரு டிவிட்டில் கூறியபோது கோலிவுட் திரையுலகினர் பலரும் இந்த சம்பவம் குறித்து நீலிக்கண்ணீர் வடித்து வருவதாகவும் இந்த சம்பவம் குறித்து யாராவது திரைப்படம் எடுத்தால் தான் தமிழ்நாட்டை விட்டே சென்று விடுவேன் என்றும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது