Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதாவின் உயில் மோடிக்கு நெருக்கமானவரிடம் உள்ளதாம்!

ஜெயலலிதாவின் உயில் மோடிக்கு நெருக்கமானவரிடம் உள்ளதாம்!

Advertiesment
ஜெயலலிதாவின் உயில் மோடிக்கு நெருக்கமானவரிடம் உள்ளதாம்!
, செவ்வாய், 17 ஜனவரி 2017 (16:02 IST)
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. ஆனால் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போதே அவர் உயில் எழுதிவிட்டதாக தகவல்கள் வருகின்றன.


 
 
ஜெயலலிதா 1991-இல் முதலமைச்சர் ஆவதற்கு முன்னதாகவே உயில் எழுதும் முயற்சியில் இருந்ததாகவும், மூத்த வழக்கறிஞர் கே.எஸ். மூலமாக உயிலைத் தயார் செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இவர் தான் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய வக்கில் என கூறப்படுகிறது.
 
பின்னர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு பெரிதானதால் வேறொரு நபர் மூலம் ஜெயலலிதா உயில் எழுதியதாக கூறப்படுகிறது. அதனை தனக்கு நம்பகமான வேறொரு ஆடிட்டரிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பிற்கு பின்னர் அந்த உயிலின் ரகசியங்கள் வெளியாக வேண்டும் என்பது ஜெயலலிதாவின் விருப்பமாம். விரைவில் அந்த உயிலின் விவரங்கள் வெளியாகும் எனவும். அந்த ஆடிட்டர் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவில் சேர்ந்த எம்ஜிஆர் அண்ணன் மகள்