தமிழகத்தில் தமிழ்வழியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருவழி கல்விகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து படித்து வருகின்றனர். தற்போது திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் தமிழ் வழியில் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பில் சலுகை உள்ளிட்டவற்றை அறிவித்து வருகிறது,
இந்நிலையில் நடக்க உள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் தமிழ்வழியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை இயக்குனர் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவித்துள்ளார். தமிழ்வழி மாணவர்கள் தவிர பிறருக்கான கட்டணங்களை வசூலித்து ஜனவரி 20க்குள் ஆன்லைனில் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.