Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திலேயே தேர்வு மையம் – மே 5 ஆம் தேதி நீட் தேர்வு !

Webdunia
புதன், 1 மே 2019 (11:04 IST)
தமிழில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேவு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வாக நீட் தேர்வை மத்திய அரசு அறிவித்ததை அடுத்து தமிழகத்தில் அதற்கெதிரான போராட்டங்கள் நடக்க ஆரம்பித்தன. தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின் தமிழக அரசு நீட் தேர்வை தடுக்க தவறியது. இதனால் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறத்யு. இதில் அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அணிதா எனும் மாணவி தற்கொலை செய்துகொண்டதை அடுத்து அது மிகப்பெரிய விவாதப் பொருளானது. அதையடுத்து இந்த மக்களவைத் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் நீட் தேர்வை ரத்து செய்வோம் என அறிவித்துள்ளது. ஆனாலும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு  மே 5 ஆம் தேதி நடக்க இருக்கிறது.

இதனை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அந்த ஹால் டிக்கெட்டுகளில் ஏதேனும் தகவல் பிழை மற்றும் எழுத்துப்பிழை இருந்தால் அதை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் சரி செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதையடுத்து சென்ற ஆண்டு போல தமிழக மாணவர்களுக்கு தொலை தூரத்திலும் அண்டை மாநிலத்திலும் தேர்வு மையங்கள் ஒதுக்கி சிரமப்படுத்தியாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இந்த் ஆண்டு தமிழில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆங்கிலத்தில் தேர்வு எழுதும் சில மாணவர்களுக்கு மட்டும் அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments