Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமலுக்கு அனிதாவின் அண்ணன் பதில் – கலாய்க்கும் நெட்டிசன்கள் !

கமலுக்கு அனிதாவின் அண்ணன் பதில் – கலாய்க்கும் நெட்டிசன்கள் !
, சனி, 13 ஏப்ரல் 2019 (15:02 IST)
யாருக்கு வாக்கு அளிக்க வேண்டும் என அனிதாவின் அண்ணனான மணிரத்னம் சமூகவலைதளத்தில் கமலுக்குப் பதில் அளித்துள்ளார்.

நேற்று டிவிட்டரில் கமல் தனது தேர்தல் பிரச்சார வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் மிகவும் ஆவேசமாகப் பேசியுள்ள கமல் ‘ யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நீட் தேர்வு எனும் அநீதியால் உயிரிழந்த அனிதாவின் பெற்றோரிடம் கேட்டு வாக்களியுங்கள்’ எனக் கூறியிருந்தார்.

அதையடுத்து கமலுக்குப் பதிலளிக்கும் விதமாக அனிதாவின் அண்ணன் மணிரத்னம் முகநூலில் கமலுக்கு தனது பதிலை தெரிவித்துள்ளார். அவரது பதிவு :-

’அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அண்ணன் கமலின் உண்மையான ரசிகன் நான்... நடிப்பிற்காக மட்டுமல்ல, திரையிலும் நிஜத்திலும் மரபுகளை உடைக்க நினைக்கும் கலைஞன், மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன தனக்கு சரியென்று படுவதை செய்யும் துணிச்சல்காரன்..ரசிகர் மன்றங்களை கலைத்து நற்பணி மன்றங்களாக மடைமாற்றம் செய்தவர். அவரைப் பார்த்துதான் 18 முறை ரத்ததானம் செய்துள்ளேன்.. உடல்தானம் செய்துள்ளேன்..

புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் மகிழ்ச்சிதான், அந்த வகையில் அண்ணன் கமலுக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கும் என் வாழ்த்துகள்...அண்ணன் கமல் சொன்னது போல யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் #நானும், எங்கள் குடும்பமும் தெளிவாகவே இருக்கிறோம்..

பாசிச_பாஜக கூட்டணிக்கு ஒருபோதும் வாக்களிக்கக் கூடாது, என்பதில்...

அனிதா இறந்த போது "திருமாவளவன்" இதை சும்மா விடக்கூடாது தாங்கள் கூறிய அதே திருமாதான் எங்கள் தொகுதியின் வேட்பாளர்..மத்திய அரசிடம் நீட் விலக்கு என்பதை நிர்பந்திக்கும் வல்லமை கொண்ட கட்சி, சமூக நீதி நிலைநாட்டும் கட்சி, மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத கட்சி, தற்போதைய சூழலில் தமிழகத்தின் குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரே கட்சி திமுக மட்டுமே.

முக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் வலியுறுத்தலின் காரணமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது.ஆதலால் எங்களின் வாக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்  தலைவர்_திருமா (தலைவர் என்ற பதத்திற்கு முழு தகுதியுடையவர்) அவர்களுக்கே என்றும்

 கமல்_ரசிகன்’ எனத் தெரிவித்துள்ளார்.

கமலுக்கு எதிராக அனிதாவின் சகோதரர் இவ்வாறு கூறியிருப்பதால் சமூக வலைதளங்களில் கமல் கடுமையாக விமர்சனமும் கேலியும் செய்யப்பட்டு வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரிந்து வரும் செல்வாக்கு.... கரூரில் யாருக்கு வெற்றி? விரிவான அலசல்!!!!