Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. பிரச்சாரத்திற்கு தயாராகும் திமுக நிர்வாகிகள்..!

Mahendran
வியாழன், 9 ஜனவரி 2025 (10:26 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ள நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்க இருப்பதை அடுத்து, திமுக உள்ளிட்ட கட்சிகள் விரைவில் வேட்பாளர்களை அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், திமுக கூட்டணி இப்போது தேர்தல் பணிகளை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் ஈரோட்டுக்கு 29ஆம் தேதி சென்று விட வேண்டும் என்றும், ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு சென்று பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்றும் தலைமை அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து, திமுக தலைவர்கள் இப்போதே ஈரோட்டில் உள்ள ஓட்டல்களில் அறைகள் புக் செய்ய தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகை முடிந்தவுடன், முழு வீச்சில் ஈரோடு இடைத்தேர்தலுக்காக திமுகவினர் பிரச்சாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. பிரச்சாரத்திற்கு தயாராகும் திமுக நிர்வாகிகள்..!

சீமான் வீட்டை சுற்றி குவிக்கப்படும் போலீஸ்.. கைதாகிறாரா?

சரணடைந்த நக்சலைட்டுகள்! நக்சல் இல்லா மாநிலமானது கர்நாடகா! - துணை முதல்வர் அறிவிப்பு!

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் 280 ரூபாய் உயர்ந்ததால் அதிர்ச்சி..!

இன்றும் பங்குச்சந்தை சரிவு.. தொடர் சரிவால் முதலீட்டாளர்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments