Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிலதிபர் வீட்டுக்குள் நுழைந்து அட்டகாசம்.. கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் கைது..!!

Senthil Velan
வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (13:05 IST)
முசிறி அருகே தொழிலதிபரிடம் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகி ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோடு பெரியார் நகரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் ஞானசேகர் ( 65 ). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.   ஞானசேகர் வீட்டில் இருந்தபோது இரண்டு கார்களில் வந்த சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட  மர்ம நபர்கள்,  அவரது வீட்டின் காலிங் பெல்லை அடித்து சத்தம் போட்டுள்ளனர்.

இதில் பயந்து வெளியே வராத ஞானசேகர் வீட்டின் உள்ளே இருந்து கொண்டு யார் என கேட்டுள்ளார். அப்பொழுது தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் ஜே.பி.சண்முகம் உங்களிடம் பேச வேண்டும் என அழைக்கிறார் என ஒருவர் கூறியுள்ளார்.
 
அப்படி யாரையும் எனக்கு தெரியாது என கூறி கதவை திறக்காமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் கதவை தட்டி காலிங் பெல்லை அடித்து கதவை உடைத்து தகராறில் ஈடுபட்டனர். இதில் பயந்து போன ஞானசேகர்  முசிறி போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று  சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

விசாரணையில், முசிறி அருகே, வெள்ளூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த மருதமுத்து மகன் பைக் மெக்கானிக் செந்தில் (40) என்பதும், ஜவேலி பகுதியை சேர்ந்த பிச்சை மகன் ஜே.பி.சண்முகம் என்பதும் தெரியவந்தது. சண்முகம் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில், மாவட்ட செயலாளர் ஆகவும், செந்தில் ஒன்றிய பொறுப்பாளராக பதவி வகித்து வருவதும் தெரிய வந்தது. 
 
மேலும் அவர்களிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ரியல் எஸ்டேட் செய்து வரும் ஞானசேகர் ஒருவரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் வரவு செலவு இருப்பதை அறிந்து கொண்டு அவரை மிரட்டி பணம் பறிப்பதற்காக சென்றதாக தெரியவந்தது. 

ALSO READ: சர்வாதிகாரத்திற்கு நாங்கள் தலைகுனிய மாட்டோம்..! பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கண்டனம்.!!
 
இதையடுத்து ஞானசேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில்  ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும்  இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments