Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தில் குண்டுவெடிப்பு..! பதற்றம் - போலீசார் விசாரணை!!!

Advertiesment
blast

Senthil Velan

, சனி, 3 பிப்ரவரி 2024 (16:40 IST)
பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பாகிஸ்தானில் வருகிற எட்டாம் தேதி நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தானின் கராச்சி மாநகரில் உள்ள தேர்தல் ஆணையத்தின் கார் பார்க்கிங் பகுதியில் இன்று குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
வெடிகுண்டு மறைக்கப்பட்டிருந்த பை ஒன்றை மர்ம நபர்கள் மறைத்து வைத்துவிட்டு சென்றிருந்த நிலையில், துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர் ஒருவர், அந்த பையன் எடுத்து குப்பையில் வீசி உள்ளார். அப்போது அந்த வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

 
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தேர்தல் ஆணைய அலுவலகத்தினுள் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருந்தால் பலத்தை சேதம் ஏற்பட்டிருக்க கூடும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வெடிகுண்டு வைத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''விஜய்யின் கட்சி பெயர் நன்றாக இருக்கிறது'' ....நடிகர்களை வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்- முஸ்லிம் லீக் காதர் மொய்தீன்