Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாட்டுப் பண்ணைக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம்!

J.Durai
வெள்ளி, 26 ஜூலை 2024 (17:01 IST)
கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சிறுவாணி மலை அடிவாரப் பகுதியில் உள்ள சுற்று வட்டார கிராமங்கள், தொண்டாமுத்தூர், நரசீபுரம், மருதமலை போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. 
 
மேலும் மருதமலை அடிவாரப் பகுதிகளான திருவள்ளுவர் நகர், தடாகம், ஐ.ஓ.பி காலனி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் அப்பகுதிகளுக்குள் வரும் ஒற்று மற்றும் 10 க்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டம் உலா வந்து கொண்டு உள்ளது. மேலும் சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் சாலையில் நடந்து சென்ற பிச்சைக்காரரை தாக்கியது, நடைபயிற்சி சென்ற தம்பதியரை துரத்தியது, இருசக்கர வாகனத்தில் வந்த நபரை  யானை ஆக்ரோசமாக துரத்தி போது அருகில் இருந்த குடியிருப்பில் வந்த கூச்சலை கண்டு வீட்டின் இரும்பு கேட்டை முட்டி அவர்களை தாக்கம் முயன்றது , வீடுகளுக்குள் முன்பு வைத்து இருந்த தொட்டியில் தண்ணீர் குடிக்கின்ற செல்போன் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதனை தொடர்ந்து அப்பகுதியில் உலா வரும் காட்டு  யானைகளால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன்பு வனத் துறையினர் அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். 
 
வனத் துறையினரும் குழுக்கள் அமைத்து அப்பகுதியில் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு ஐ.ஓ.பி காலனி அன்னை இந்திரா நகரில் உள்ள மாட்டுப் பண்ணைக்குள் அதிகாலை 3.30 மணிக்கு புகுந்த ஐந்துக்கு மேற்பட்ட காட்டு யானைகள் அங்கு மாடுகளுக்கு வைத்து இருந்த உணவுப் பொருள்களை ருசியாக உண்ணும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிகிரி படிப்பை முன்கூட்டியே முடிக்கலாம்.. 3 வருடம் தேவையில்லை! - UGC அளித்த ஒப்புதல்!

காங்கிரஸ் உறவை துண்டிக்க வேண்டும்: உத்தவ் தாக்கரேவுக்கு சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி?

மருத்துவமனைக்குள் நுழைந்து பெண் டாக்டர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது: குடும்ப சண்டையா?

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மெமு ஏ.சி. ரயில்: தெற்கு ரயில்வே தகவல்..!

ஃபெங்கல் புயல்: இன்றும் நாளையும் அதி கனமழை: 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments