Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்கிரவாண்டியில் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு..! வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு..!!

Candidate

Senthil Velan

, திங்கள், 8 ஜூலை 2024 (12:41 IST)
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் 20 நாட்களாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
 
விக்கிரவாண்டி சட்டமன்றத் உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஜூன் 14ஆம் தேதி தொடங்கியது. 
 
இந்த இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பா.ஜ.க கூட்டணியில் உள்ள பா.ம.க சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியில் உள்ளனர். தி.மு.க, பா.ம.க நா.த.க உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேட்சை என மொத்தம் 29 பேர் களத்தில் உள்ளனர். 
 
அதே சமயம் அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளது.  இந்த தேர்தலில் வெற்றி பெற மும்முனை போட்டி நிலவியது. மூன்று கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் 20 நாட்களாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.


தேர்தல் நடத்தை விதிப்படி இன்று மாலை 6 மணிக்கு மேல் வாக்கு சேகரிக்கவோ, பிரச்சாரம் மேற்கொள்ளவோ கூடாது, மேலும், விக்கிரவாண்டி தொகுதியில் மாலை 6 மணிக்குள் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர் வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணிக்கை  ஜூலை 13ஆம் தேதி நடைபெற உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் விழுப்புரத்துக்கு அநீதி..! அன்புமணி கண்டனம்..!!!